தண்டையார்பேட்டையில் பெட்டிக் கடை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டிய இளைஞர்கள் கைது .

0
367

தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் பகுதியில் மூன்று வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வரும் காமராஜிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டு உள்ளனர் இந் நிலையில் பெட்டி கடை வியாபாரி காமராஜ் காவல்துறையின் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார் இதன் அடிப்படையில் விரைந்து வந்த ஆர்கே நகர் காவல் துறையினர் இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது எழில் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் முகமது யூசப் என்பது தெரியவந்தது இவர்கள் மீது முன்னதாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது அதேபோல் கத்தியை காட்டி மிரட்டிய போது அவர்கள் போதையில் இருந்ததும் தெரியவந்தது அவர்கள் இருவர் மீதும் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர் அவர்கள் பயன்படுத்திய கத்தி மற்றும் இரு சக்கர வாகனங்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர் மேலும் தப்பி ஓடிய புவனேஸை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here