வேலூர் மாவட்டம் குடியாத்தம்,-ஒரிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் இன்று குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர்களிடமிருந்த பைகளில் சோதனை செய்த போதுஅதில் 23 கிலோ கஞ்சா பொட்டளங்கள் இருப்பது தெரியவந்தது மேலும் ஒரிசா மாநிலத்தில் இருந்து தேனிக்கு கஞ்ஜா கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது
இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (21) தேனி மாவட்டத்திற்கு சேர்ந்த முகமது காளித் (32) ஆகிய இருவரை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கைது செய்யப்பட்ட அபிஷேக் ஏற்கனவே கொலை வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது











