வேலூர் காட்பாடியில் உள்ள ரயில்வே பாலத்தினால் இன்று பரபரப்பு- இரு பெரும் கட்சிகளுக்கு இடையே பெரும் மோதலை உருவாக்கும் சூழல்-

0
156

வேலூர் மாவட்டம் வேலூர் காட்பாடியில் உள்ள ரயில்வே பாலத்தினால் இன்று பரபரப்புஏற்பட்டுள்ளது பாலத்தை மையப்படுத்தி ஏற்பட்டுள்ள இந்த அரசியல் சூழல் இரு பெரும் கட்சிகளுக்கு இடையே பெரும் மோதலை உருவாக்கும் சூழல் உருவாகி அதிமுக திமுக இரு கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிமுகவின் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு அவர்களை கைது செய்யும் அளவிற்கு சென்று விட்டது ஆந்திரா தமிழக எல்லையில் அமைந்துள்ள காட்பாடி ரயில்வே பாலத்தை அவ்வப்போது பழுது பார்ப்பதும் பின்னர் போக்குவரத்துக்கு அனுமதிப்பதுமாக இருந்தது இலையில் பாலம் மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் அதை சரி செய்ய கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போக்குவரத்து தடை செய்யப்பட்டது போக்குவரத்து தடை செய்யப்பட்ட பாலத்தில் பழுது பார்க்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் 120 டன் கொண்ட கனரக வாகனங்களை பாலத்தின் மேல் நிற்க வைத்து பாலத்தின் சிறப்பு தன்மையை சோதித்தனார் பின்னர் இருசக்கர வாகனங்கள் தற்சமயம் செல்ல அனுமதித்து சில நாள் கழித்து கனரக வாகனங்கள் செல்லலாம் என்று கூறினார் இந்நிலையில் நேற்று 1- 7 – 2022 அன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட ரயில்வே பாலத்தினால் போக்குவரத்து ஸ்தம்பித்து நீண்ட நேரமாக வாகனங்கள் நின்று கொண்டிருந்தது இதனை அறிந்த வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தனது ஆதரவாளர்கள் கட்சியினருடன் ரயில்வே மேம்பாலத்திற்கு வந்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இதுபோன்று காலம் தாழ்த்துவது சரியல்ல கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே நாளில் பாலத்தினை சரி பார்த்தோம் என்று கூறி ரிப்பனை வெட்டி போக்குவரத்துக்கு வழி விடுகிறோம் இது காழ்ப்புணர்ச்சியால் செய்யப்பட்ட போராட்டம் அல்ல பொதுமக்களின் நலன் கருதி நாங்கள் நடத்திய போராட்டம் இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் மற்றும் இப்பகுதி எம்எல்ஏ மக்களுக்கு நல்லது செய்ய நினைக்க வேண்டும் என்று கூறினார் இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் கதிரானந்த் ஆகியோர் பாலத்தின் வேலை இன்னும் நிறைவடையவில்லை இந்நிலையில் தேவை இல்லாமல் அரசியல் செய்கிறார் என்பதை குறித்து பேசினார் இதனை தொடர்ந்து வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் நிவேதா கொடுத்த புகாரின் பேரில் வேலூர் ஆகிய அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு கைது செய்யப்பட்டார் இதனால் 2 மணி நேரத்திற்கு மேல் காட்பாடி காவல் நிலையம் அ.தி.மு.க.வினரால் முற்றுகையிடப்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here