பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி -போலீசார் விசாரணை;

0
271

மதுரை:திருமங்கலத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 45) . இவர் முகநூலில், வெளிநாட்டு லாட்டரி நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து, அவரது பெயரை விளையாட்டாக பதிவு செய்துள்ளார். சில தினங்களுக்கு பிறகு, லாட்டரி நிறுவனத்தில் இருந்து சுப்புலட்சுமிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் அவருக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகவும், பரிசுத் தொகை பெறுவதற்கு வரி கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதை நம்பிய சுப்புலட்சுமி அந்த நபர் தெரிவித்த 7 வங்கி கணக்குகளில் ரூ.27 லட்சத்தை செலுத்தி உள்ளார். ஆனால் நீண்ட நாளாகியும் லாட்டரி நிறுவனம் அவருக்கு பரிசுத் தொகையை கொடுக்கவில்லை. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்புலட்சுமி, மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here