100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருவொற்றியூர் மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு பதாகைகள் கைகளில் ஏந்தி ஊர்வலமாக நடந்து சென்றனர். அனைவரும் வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
















