குடியாத்தம் நிருபர். சுவேதா எஸ்.கார்த்திகேயன்,
வேலூர்மாவட்டம் குடியாத்தம் அடுத்த சென்ராயனபள்ளி பகுதியில் அமைந்துள்ள ஆர்யா (CBSE) பள்ளியில் பயிலும் மாணவர்கள் நேற்று புத்தாண்டை முன்னிட்டு (01.01.2023) சென்னை மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அமெரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் நிகழ்ச்சியில் ஆர்யா பள்ளி சார்பாக 29 மாணவர்கள் கலந்து கொண்டு கராத்தே குத்துதல் போட்டியில் தொடர்ந்து இருவது நிமிடம் 23 வினாடிகள், போட்டியில் உலக சாதனை புரிந்தார்கள். இதனைத் தொடர்ந்து இன்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு ஆரிய பள்ளியின் தலைவர் தண்டபாணி சான்றிதழ்கள் வழங்கினர். மேலும் பள்ளி அறக்கட்டளை நிர்வாக தலைவர் ஸ்டாலின் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆரிய பள்ளி முதல்வர் நரேந்திர ரெட்டி வரவேற்பு உரையாற்றினார் மேலும் கராத்தே ஆசிரியர் யுவராஜுக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.








