சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பாலகிருஷ்ணா நாயுடு காலனி பகுதியைச் சார்ந்த பலராமன் என்பவர் ராஜஸ்தான் பகுதியைச் சார்ந்தவர் இவர் ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் இப்பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்றைய முன் தினம் இரவு இவரது எட்டு வயது மகள் அனிதா மீனா என்பவர் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது இரண்டாவது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக எட்டு வயது சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் சென்னை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இதனை தொடர்ந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
















