செய்தியாளர் சந்திப்பில் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு:

0
387

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடியிருப்பு மக்களுக்கு மாற்று இடம் வழங்காமல் சுரங்கப்பாதை அமைக்க குடியிருப்புகள் இடிப்பதை கண்டித்து பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடியிருப்பு மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு 10 நொடி ஒரே இடத்தில் அசையாமல் நின்ற சீமான் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகில் நின்ற பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தண்ணீர் தெளித்து விட்டு சீமானை தூக்கிக் கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சிற்கு தூக்கி சென்றனர்.சீமானுக்கு ஆம்புலன்சில் இருந்த மருத்துவர் முதலுதவி சிகிச்சை கொடுத்தனர்.

காலை உணவு அருந்தாதது மற்றும் வெயிலில் அதிக நேரம் நின்றதன் காரணமாக சீமானுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் முழுவதும் குணம் அடைந்து விட்டதாகவும் அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்ததை தொடர்ந்து
தனது கார் மூலம் சீமான் இல்லம் புறப்பட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here