திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோ‌வில் மாசி பிரம்மோற்சவ விழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது.

0
271

திருவொற்றியூர் -தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோ‌வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தியாகராஜ சாமி சன்னதி மண்டபத்தில் கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு விசேஷ பூஜைகள், யாகங்கள் நடந்தன. விநாயகர் உற்சவர், தியாகராஜ சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here