ரவுடி தலையில் அரிவாள் வெட்டு- இருவர் கைது:

0
350

காசிமேடு பகுதியில் முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு தெருவில் நடந்து சென்ற ரவுடியை வேண்டும் என்றே வம்பிழுத்து தலையில் வெட்டிய சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்,

சென்னை காசிமேடு காசிபுரம் ஏ பிளாக்கில் வசித்து வருபவர் ரவுடி அஷ்வின் குமார் (22) அதே பகுதியில் உள்ள சிங்காரவேலன் நகர் 1வது தெருவில் நடந்து சென்றபோது
சரவணவன்(22) ராகேஷ்(24)
எண்ணூர் வில்வா, தேனாம்பேட்டை கவின்,
அவரை வேண்டும் என்றே வம்பிழுத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்

இதில் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறவே ராகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவுடி அஷ்வின் தலையில் வெட்டியுள்ளார்

இதின் பின் தலையில் வெட்டு காயம் முதுகு கை போன்ற இடங்களில் கீறல் காயங்கள் ஏற்ப்பட்டது

சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்ட ரவுடி அஷ்வின் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காசிமேடு போலீசார்

சரவணன் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்தனர்

தப்பி ஓடிய அவர்களது கூட்டாளி இருவரையும் தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here