சமுக நல்லிணக்க பேரவை-சென்னை சார்பாக 25 -11- 2001 அன்று, மாலை 6-00 அளவில் ஃபார்ஸி கிளப் அரங்கில் சமூக நல்லிணக்க பேரவை அறிமுக கூட்டம் :

0
453

இராயபுரம், சென்னை சார்பாக ஃபார்ஸி கிளப் அரங்கில் சமூக நல்லிணக்க பேரவை அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் துவங்குவதற்கு முன் அரங்கம் சுற்றியுள்ள பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.*டாக்டர் ஜஹீர் அஹ்மத்* அவர்கள் வரவேற்புரையாற்றினார்
*சகோதரி சோஃபியா* அவர்கள் பேரவையின் நோக்கம் என்ன என்ற தலைப்பிலும்,
*வழக்கறிஞர் தேசிங்கு* அவர்கள் மனித ஒருமைப்பாடு என்ற தலைப்பிலும், *ஃபாதர் கிறிஸ்டோஃபர்* அவர்கள் சமூக நல்லிணக்க பேரவை யின் வரலாறு என்ற தலைப்பிலும், *கவிஞர் இனியவன்* அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் கடைசியாக பேசிய *திரு . S. N.சிக்கந்தர்* அவர்கள் சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தைப் பற்றி மிகவும் தெளிவாக பேசினார்.

சுமார் 30 நிமிடம் பார்வையாளர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

*திரு சலீம்* அவர்கள் நன்றி உரை ஆற்றிய பின் தேசிய கீதத்துடன் கூட்டம் முடிந்து. ஆண்களும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டார்கள்.கூட்டத்தை *திரு ஷேச நடராஜன்* அவர்கள் மிக சிறப்பாக வழி நடத்தினார், *சமுக நல்லிணக்க உறுதி மொழியும்* எடுக்கப்பட்டது, வந்தவர்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கூட்டம் மிக சிறப்பாக முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here