ஆர்கே நகரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது;

0
320

சென்னை கொருக்குப்பேட்டை வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக கஞ்சா போதை பாக்கு விற்கப்படுவதாக தண்டையார்பேட்டை உதவி ஆணையர் இருதயராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் ஆர்கே நகர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர் அப்போது கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரையும் ஒரு பெண்ணையும் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் கொருக்குப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்த உதல்குமார் வயது 30 இவன் பீகாரை சேர்ந்தவர் கொருக்குப்பேட்டை அண்ணா நகரில் தங்கி லோடு வேலை செய்து வருகிறான் இதற்கிடையே கஞ்சா வாங்கி இந்த பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார் இவனுக்கு கஞ்சா சப்ளை செய்வது மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த சரசு என்கின்ற மஸ்தானி வயது 50 என்ற பெண் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா கடத்தி வந்து சிறு சிறு பொட்டலங்களில் போட்டு இதுபோல் கொருக்குப்பேட்டை தண்டையார்பேட்டை பகுதிகளில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா 75 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது கைது செய்த இருவரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோல் கஞ்சா விற்பவர்களை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here