சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் நேற்று இரவு 11 மணியளவில் கொருக்குப் பேட்டையில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளம் அருகில் ரோந்து மேற்கொண்டு இருந்தனர்
அப்போது தண்டவாளத்தின் அருகில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது அந்த பையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோது அதில் இரண்டு கிலோ பார்சல் செய்யப்பட்ட ஏழு பார்சல்கள் இருந்தது அதை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது இதனையடுத்து அந்த பார்சலை கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
இந்த கஞ்சா பொட்டலங்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னையில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்றும் மேலும் கொருக்குப்பேட்டையில் பார்சலை போட்டுவிட்டு தனிநபர் பார்சலை எடுப்பதற்கு முன்னதாக காவல் துறையினர் கண்டுபிடித்து அதனால் சென்னையில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுகிறது தவிர்க்கப்பட்டது
இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து வரும் ரயிலில் இருந்து போடப்பட்டதாக இருக்கும் குறிப்பிட்ட நபர் அங்கு வருவதற்குள் போலீசார் அந்த இடத்தில் சோதனை செய்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு சேராமல் போலீசார் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் போதைப்பொருள் தடுப்பு போலீசார் வசம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்














