கொரோனா தடுப்பூசி- நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்- தமிழக சுகாதாரத்துறை

0
232

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தற்போது தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தடுப்பூசி கையிருப்பு தீர்ந்ததால் தமிழகத்தில் 3-ந் தேதி முதல் 3 நாள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று கூறினார்.

மேலும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை 5.30 மணியளவில் வந்தடைந்தது.

சென்னை வந்த தடுப்பூசிகள் இன்று இரவே மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி, தடங்களின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here