தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நடந்த மோதலில் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ;

0
309

நத்தத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். திமு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் நடைபெறும் போது மேடையில் இருந்த தி.மு.க.வினர் சிலரை மூத்த நிர்வாகிகள் கீழே இறங்க சொன்னதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. ஒருவரையொருவர் தள்ளி விட்டனர். மேலும் கூட்டத்தில் இருந்த நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் கூட்டத்தில் இருந்த கட்சியினர் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். பின்னர் கூட்டம் அமைதியாக நடந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here