செங்கல்பட்டு மாவட்டம் செல்வி நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் வயது 42. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சிக்கு இணைந்து உள்ளார். 2012ஆம் ஆண்டு செங்கல்பட்டில் மிகப் பிரபல ரவுடியான விஜயகுமார் கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்துள்ளார். இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் இறந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை செய்தனர். அத்துடன் சேகரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். கொலை செய்தவர்களை பிடிக்க தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.















