ஆம்பூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு;

0
321
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகம். கடந்த 12 ஆம் தேதியில் இருந்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி உடல்நலம் மிகவும் மோசமானதால், அவருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று வெளியான பரிசோதனை முடிவுகளின்படி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தார், இது குறித்து தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், உயிரிழந்த சண்முகம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து சண்முகத்தின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து தற்போது சண்முகத்தின் உடலை உரிய பாதுகாப்புகளுடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்ள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here