திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியம் கணக்கம் பாளையம் ஊராட்சி காந்திபுரம் எட்டாவது வார்டு சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதுஅதுசமயம் எட்டாவது வார்டு செயலாளர் எம் சண்முகம் அவர்கள் தனது சொந்த செலவில் நினைவு கொடிக்கம்பம் அமைத்து தளபதி ஸ்டாலின் அவர்களது ஆணைக்கிணங்க கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 97 ஏழை எளிய குடும்பங்களுக்கும் மற்றும் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் 50 பேருக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கழக முன்னோடிகளும் கழக உடன்பிறப்புகளும் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்













