சென்னை 19 காலடிப்பேட்டை வெஸ்ட் மாதா தெரு 12 வாா்டுக்கு உட்பட்ட இந்த பகுதிகளில் விடு கடைகள் அதிகமாக இருக்கும் இந்த பகுதி கடை எண்4 அருகில் குப்பை தொட்டியை வைத்து குப்பைகள் கொட்டுவதில் குப்பை சிதறி ரோட்டில் கிடக்கிறது இதனால் இந்ந பகுதி பொதுமக்கள் CI இடம் பொதுமக்கள் பலமுறை புகாா்
சொல்லியும் இது வரை கண்டு கொள்ளவில்லை பொதுமக்கள் ஆகிய நாங்கள் யாரிடம் முறையீடுவது,
அதே போல் இந்த குப்பை தொட்டி 1வருடம் முன்பு தீனதாஸ் பள்ளிக்கு அப்பால் இருந்தது அங்கு இருந்த குப்பை தொட்டியை 6மாதத்திற்கு முன்பு எடுத்து வந்து கடை எண்4அருகில் குப்பைத்தொட்டியை வைத்து
விட்டாா்கள் இதனால் இந்த பகுதியில் கொசுக்களும் அதிகமாக இருப்பதால் டெங்கு மலேரியா காய்ச்சல், யானைக்கால் நோய் மற்றும் கோரோனா வந்து விடுமோ என்று இந்த பகுதி
மக்கள் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனா், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இருந்த போது அந்தந்த எரியாக்களில் பொது மக்களின் பிரச்சனையை தீர்க்க மாதத்திற்கு ஒரு நாள் கூட்டம் அந்தந்த எரியா தலைவா் மற்றும் பொதுமக்களை வைத்து பொதுமக்களின் குறைகளை கேட்பாா்கள் ஆனால் இப்போது அதெல்லம் கிடையாது என்று இந்ந பகுதி சமூக ஆா்வலரும் பொதுமக்களும் புலம்புகின்றனா்
ஆகவே இந்தபகுதி கடை எண்4 அருகில் இருக்கும் குப்பை தொட்டியை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று 12 வாா்டு பொது மக்களும் இந்த கடை வைத்து பிழைப்பு நடத்துபவா்களும் , இந்த வழியாக முக்கை மூடிக்கொண்டு செல்பவா்களும், சமூக ஆா்வலா்களும் கோாிக்கை வைக்கின்றனா்.













