விளையாட்டுப் போட்டி- தமிழ்நாடு காவல்துறை அணி 1 வெள்ளி, மற்றும் 3 வெண்கல பதக்கம்:. 

0
210

ஜம்மு-காஷ்மீர் உள்விளையாட்டு அரங்கில் அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டிகள் 13.10.2025 தேதி முதல் 16.10.2025 வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு  காவல்துறை வுஷூஅணியினர் 20 பேர் கலந்து கொண்டனர். இவர்களை தமிழ்நாடு வுஷூ காவல்துறை பயிற்சியாளர் திரு. தண்டபாணி திரு.மணிகண்டன் அவர்கள் இப் போட்டிக்கு அழைத்துச் சென்றனர். இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி 1 வெள்ளி, மற்றும் 3 வெண்கல பதக்கத்தை வென்றது. இதில் வுஷூ சண்டை பிரிவில் திரு . ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கமும், திரு. விஜயன் ஒரு வெண்கல பதக்கமும், செல்வி .தேவி ஒரு வெண்கல பதக்கமும் வென்றனர். வுஷூ பாட பிரிவில் செல்வி. கிரேசி மார்க்கெட் ஒரு வெண்கல பதக்கம் வென்றார் . இவர்களை தமிழ்நாடு வுஷூ அசோசியேசன் தலைவர், திரு. அலெக்ஸ் அப்பாவு, தமிழ்நாடு வுஷூ அசோசியேஷன்  செயலாளர், திரு. ஜான்சன், சென்னை டிஸ்ட்ரிக்ட் வுஷூ அசோசியேசன் தலைவர் திரு. புல்கனின், சென்னை டிஸ்ட்ரிக்ட் வுஷூ அசோசியேஷன் செயலாளர், திரு.விசாகபதி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here