பாதுகாப்பு வழிமுறைகள்
பட்டாசு வெடிக்கும் பொழுது தண்ணீருடன் ஒரு பக்கெட் கண்டிப்பாக வைத்திருங்கள்
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மேலும் நீளம் அதிகமான பத்திக்குச்சியை பயன்படுத்தி பட்டாசு வெடிக்கவும் மேலும் பட்டாசு வெடிக்கும் பொழுது கையில் வைத்து வெடிக்கும் எண்ணத்தை கைவிடவும்
குழந்தைகள் வெடிக்கும் பொழுது அருகில் பெரியவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்
வெடிக்கப் போகும் பட்டாசை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு சென்று வெடிக்க வேண்டும் உடைக்காத பார்சல் வீட்டுக்குள் இருப்பது நலம்
சரவெடி போடும்போது கண்டிப்பாக குழந்தைகள் மீது கவனம் செலுத்தவும் மேலும் பட்டாசு பார்சல் அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
அருகில் உள்ள மருத்துவமனையில் நம்பர் அறிந்து வைத்துக் கொள்ளவும் மேலும் முதலுதவி மருந்துகளை தவறாமல் வீட்டில் வைத்துக் கொள்ளவும் இது தங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படும்
மேலும் தங்கள் வீட்டின் அருகே வயதானவர்கள் உடல்நிலை சரியில்தவர்கள் இருந்தால் அவருடைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களுடைய பண்டிகையே கொண்டாடுங்கள்
பட்டாசு வைக்கும் பொழுது சிறிது தூரத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறோமா என முதலில் அறிந்து கொள்ள வேண்டும்
தரச்சக்கரம் புஸ்வானம் மற்றும் கையில் வைத்து வெடிக்கும் பொருட்கள் மீது கவனம் தேவை பல்லாயிரம் கோடி செலவுகள் செய்து விடும் ராக்கெட் கூட விஞ்ஞானியின் சோதனையில் தோல்வி அடைகிறது அது போல் கவனம் தேவை
நமது ஆடைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் மேலும் வெடிக்காத பட்டாசுகளை உடனே சென்று எடுக்கக்கூடாது சிறிது நேரம் கழித்து எடுத்தாலும் அதனை தண்ணீரில் நனைத்து விடவும்
கம்பி மத்தாப்பு பயன்படுத்தும்பொழுது சூடான கம்பியை தண்ணீரில் போட்டு வைக்கவும்
மேலும் அந்த கம்பிகளை குப்பைத்தொட்டியில் போடாமல் குப்பை வாங்க வருபவரிடம் கொடுக்கும் பொழுது அவர்கள் பயன் பெறுவார்கள்
அவர்களின் பொருளாதார உயர்வதற்கு சிறு தங்களால் முடிந்த உதவியாக இருக்கும்
எப்பொழுதும் கவனக் குறைவுடன் குழந்தைகள் நடந்து கொள்ளாத பாரு பார்த்துக்கொள்ளவும்
தங்களை அறியாமல் குழந்தைகள் சிறு தவறு செய்து ஏதும் விபரிதம் ஏற்பட்டாலும் உடனே கண்டிக்காதீர்கள் அவர்கள் வலியோடு இருக்கும் பொழுது ஆதரவாக பேசி பழகுங்கள் மேலும் பட்டாசுகள் வெடிக்கும் முன்பு அதனால் வரும் விளைவுகளை முன்கூட்டியே கூறி அதன் பின்பு பட்டாசு வெடிக்க அறிவுறுத்துங்கள்
பட்டாசுகள் வெடிக்கும் பொழுது குழந்தைகளின் ஆடையின் தரத்தை தாங்கள் முதலில் உணர்ந்து கொள்ளுங்கள் பருத்தி ஆடையாக இருந்தால் மிகவும் நல்லது வேறு ஏதும் ஆடைகள் குழந்தைகள் அணிந்திருந்தால் அவர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்தரவாதம் கொடுக்கும் விதத்தில் மிக அருகில் இருந்து கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்
நமது பட்டாசுகள் மிகவும் தரமாக இருக்கும் ஏதேனும் சிறு தவறு நடந்து வெடிக்காத ஒரு சில வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து மீண்டும் பயன்படுத்தும் எண்ணத்தை கைவிடவும் இது தங்களின் பாதுகாப்புக்கு மிக மிக முக்கியமான ஒன்று என்பதை குழந்தைகளுக்கு அறிவுரை கூறுங்கள்
மேலும் நமது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அருகிலுள்ள குழந்தைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பெரியவர்கள் கவனமாக நடந்து கொள்ளவும்
இது மனிதாபிமானத்துடன் நமது உறவினர்கள் நண்பர்களுக்கு செய்யும் நமது உதவி மேலும் வாகனங்கள் செல்லும் பொழுது கவனமாக பட்டாசு வெடிக்கவும்
பெட்ரோல் வண்டிகள் அருகி இருக்கும் பொழுது பட்டாசு வெடிக்கதை தவிர்க்கவும்
பெட்ரோல் வண்டிகளை கவனமாக பாதுகாப்பான இடத்தில் ஒவ்வொருவரும் நிறுத்தி வைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
மேலும் சாலைகளில் வாகனங்கள் வருகிறதா அல்லது முதியவர்கள் குழந்தைகள் மற்றும் சில நபர்கள் வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பட்டாசு வெடிப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.












