வடசென்னை பகுதியில் சில நாட்களாகவே ரவுடிகளின் அட்டகாசம் தலை விரித்து ஆடிவரும் நிலையில் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை ஏகாம்பர செட்டி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் தினேஷ் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது இதனைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் வெட்டி கொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார் இது குறித்து போலீஸ் சார்பில் கூறப்படுவது கொருக்குப்பேட்டை பகுதியில் ரவுடிகளுக்கு இடையே மோதல் இருப்பதாக நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தும் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு அடிப்படையில் ஆய்வாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இந்த சம்பவத்தினால் வடக்கு காவல் மாவட்டத்தில் உள்ள ஆய்வாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.











