17.10.2025 சென்னை பெரிய மாத்தூர் அத்திகுளம் தெருவில் இரவு 11.00 மணி அளவு முகம் தெரியாத நரி குறவர்கள் இருவர் காரணமின்றி தெருவில் இருந்த நாய்களை பிடுத்து கொண்டிருந்தனர் இந்த செய்தியை கேட்ட சமூக ஆர்வலர் திருமதி.சாரா என்கிற சரண்யா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது தெரு நாயை வாய் மற்றும் கை கால்களை கட்டி சிறிதும் மூச்சு விட முடியாதவாறு துணி மூட்டையில் கட்டி அவர்கள் வைத்திருந்த TVS வண்டியில் ஏற்றி கொண்டிருந்தனர் அப்போது இறகை தடுத்து நிறுத்திய சாரா அவர்களிடம் மூச்சு விட முடியாமல் தவிக்கும் நாயை முதலில் கட்டை அவித்து விடு என கூறிய போது அருகில் இருந்த ஒருவர் நீங்கள் யார் எப்படி தடுக்கலாம் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் அப்பொழுது அந்த தெருநாய்க்கு உணவு அளித்துவரும் தெரு மக்கள் இந்த நாய் யாரையும் எதுவும் செய்ததில்லை ஏன் யாரும் இல்லாத இரவு நேரத்தில் இப்படி திருடர்கள் போல் வந்து நாய்களை பிடித்து கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர் அதற்கு நாய்களை பிடிக்க சொன்ன சரவணன் அவரது மனைவி தேவி அடி ஆட்களை அழைத்து வரவா என கூறி தனசேகர் என்பவரை அழைத்து வந்து மிரட்டினார் மேலும் இவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என மிரட்டினார் அப்பொழுது சாரா மற்றும் தெரு மக்கள் ஒன்று கூடி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டி அவர்களை விரட்டி அடித்து உயிருக்கு போராடிய நாயை மீட்டனர் இது போன்று முன் பின் தெரியாத நபர்கள் நகராட்சி பெயரை பயன்படுத்தி TATA AC போன்ற வாகனங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி சுற்றி வருவதாகவும் அவர்கள் கண்களில் படும் நாய்களை பிடித்து செல்வதாகவும் பிடித்து செல்லப்பட்ட நாய்கள் பல நாட்கள் ஆகியும் திரும்ப வருவதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் மேலும் நகராட்சி பெயரை துஷ்பிரயோகம் செய்து வரும் இந்த சம்பவங்களை மாநகராட்சி தீர விசாரித்து சம்பதம் பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்











