கடந்த இரண்டு நாள் முன்பு சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பேருந்தில் கத்தி அருவா துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் ஒரு கைப்பையில் இருந்ததாக நெல்லை மாநகர அரசு பஸ் டிப்போவில் துப்புரவு பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து நெல்லை காவல்துறையினர் பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி கைரேகை ஆய்வுக்காக நெல்லைக் காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டது இதை அடுத்து தமிழக முழுவதும் மக்கள் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையினர் ஆங்காங்கு வாகன சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்
ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் நேற்று இரவு ராயபுரம் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார் அப்போது ஒரு பைக்கில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென குடிபோதையில் இருந்த மூன்று பேரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர் சண்டை போட்டு அவரை அடித்து விட்டு ஒருவன் தப்பி ஓடிவிட்டார் இரண்டு பேரை மடக்கி அவர்களிடம் இருந்து செல்போனை வாங்கி ஜிப்பில் வைத்துவிட்டு விசாரணை செய்து கொண்டிருந்தபோது அதில் ஒருவன் ஜிப்பிலிருந்து செல்போனை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான் ஒருவனை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் காசிமேட்டை சேர்ந்த முகிலன் (22) சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருவதாகவும் இவருடைய நண்பர்கள் சரத், விக்கி, ஆகியோருடன் டாஸ்மார்க் மதுபான கடையில் மது அருந்திவிட்டு ஒரே பைக்கில் மூன்று பேர் வந்ததாக தெரிவித்தார் மேலும் தப்பி ஓடிய ரெண்டு பேரை ராயபுரம் போலீசார் தேடி வருகிறார்கள் வாகன சோதனை ஈடுபட்ட உதவி ஆய்வாளரை குடிபோதையில் வந்த வாலிபர்கள் தாக்கிய சம்பவம் ராயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












