திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாகமுகவர்களின் ஆலோசனை கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட அவைத் தலைவர் மு. பகலவன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கே ஜி பாஸ்கர் சுந்தரம்,மாவட்ட துணை செயலாளர் கோளூர் கதிரவன், மீஞ்சூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி,பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், பழவை அலவி,கன்னிமுத்து, ஆரணி அன்புவாணன்,உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன்,மாநில மாணவர் அணி துணைச் செயலாளரும்,தொகுதி பொறுப்பாளருமான க.அமுதரசன், கலந்துகொண்டு
திமுக பாகமுகவர்களுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும், வருகின்ற ஐந்தாம் தேதி திருவள்ளூரில் பாக முகவர்களுக்கு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாகவும் இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார் இதில் வல்லூர் தமிழரசன், தடப்பெரும்பாக்கம் ராஜா, உள்ளிட்டதிரளான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டிகி. வேணு உள்ளிட்டவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.









