சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் வேலை பார்த்து வந்தனர்
இதனைத் தொடர்ந்து கால்வாய் அமைக்கும் பணியின் போது வட மாநில தொழிலாளர்கள் இருவர் மீது தீடீரென மண் சரிந்து விழுந்ததில் இருவரும் அதில் சிக்கி கொண்டனர்.
இதனை அறிந்த அப்பகுதி மீனவர்கள் போலீசார்க்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி இயந்திரம், மற்றும் மீனவர்கள் உதவியுடன் வட மாநில தொழிலாளர்கள் பிரகாஷ், மற்றும் அம்விரிஷ் ஆகிய இருவரையும் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்டனர்
சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் ஒன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவகுமார் இருவரையும் உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்
அம்ரேஷ் குமார் என்ற நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜெய் பிரகாஷ்ராய் என்ற மற்றொரு நபர் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்











