பல்வேறு வேலைகளுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக ராஜா என்ற விஸ்வநாதன்  கைது;

0
227

சுப நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இடையர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற விஸ்வநாதன்  கைது செய்யப்பட்டார். இவர் காரைக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உசிலம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூர் பகுதியில் ராஜாவை அரை நிர்வாண படுத்தி பெண்கள் உள்பட சிலர் தாக்கிய வீடியோ வைரலான விவகாரத்தால் தான் ராஜா பற்றிய தகவல்கள் வெளிவந்தன.

விழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கும், திருமண வரவேற்பு பணிகளுக்கும் பெண்களை அழைத்து செல்ல “வெல்கம் கேர்ள்ஸ்” என்ற நிறுவனத்தை ராஜா தொடங்கி உள்ளார்.

இதன் மூலம் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆனால் நாளடைவில் பணத்திற்கு ஆசைப்பட்டு தவறான பாதையை கையாண்டு தற்போது கைதாகி சிறையில் உள்ளார்.

இவரது செயல் குறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் மனு குறித்து சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். அவருக்கு உதவியாக போலீஸ் ஏட்டு ஒருவர் செயல்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கைதான ராஜா போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் உயர் அதிகாரிகள் ஆலேசானையின்பேரில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

சுப நிகழ்ச்சிகளுக்கு பெண்களை அழைத்து வந்த ராஜா அவர்களது வறுமையை பயன்படுத்தி சிலரை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாகவும், அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சில பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே மது குடிக்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன.

மேலும் முக்கிய பிரமுகர்களுக்கு சில பெண்களை நாள் கணக்கு, மாத கணக்கு என அனுப்பி வைத்து பெரும் தொகை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதால் முக்கிய பிரமுகர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

புகாரில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். ராஜா கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவ விடுப்பை நீட்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், பாலியல் புகாருக்கும், ஏட்டுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் ராஜா தாக்கப்பட்ட புகார் குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தானாகவே விசாரணை நடத்தியது ஏன்? என்பதுதான் குற்றச்சாட்டாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்த சம்பவத்தில் ராஜா மட்டும் தனியாக செயல்பட்டு இருக்க முடியாது. அவருக்கு மேலும் பல முக்கிய பிரமுகர்கள் உதவியாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

இதற்கடையில் கைதான ராஜா போலீசாரிடம் கூறுகையில், நான் யாரையும் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தவில்லை. வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட சில பெண்களுடன் விடுதியில் மது அருந்தியது உண்மை தான். அப்போது அவர்களை வீடியோ எடுத்தேன். இதற்கு அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் தான் என்னை தனியாக வரவழைத்து அவர்கள் தாக்கினர். அப்போது என்னிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் தங்க நகைகள், மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here