தண்டையார்பேட்டையில் வீட்டு உரிமையாளரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் 31 வயதுடைய நஜூகான் என்ற வாலிபர் வீட்டு உரிமையாளருக்கு வீட்டு வாடகை கொடுக்காமல் 3 மாத காலமாக அளக்கழித்து வந்துள்ளார் வீட்டு உரிமையாளர் வாலிபரிடம் வீட்டு வாடகையை தரும்படி வற்புறுத்தியுள்ளார் இதனை தொடர்ந்து வாலிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு உரிமையாளரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இதனையறிந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவலின் பேரில் காவல்துறையினர் வந்து பார்ப்பதற்குள் நஜூகான் தலைமறைவாகி விட்டார்
இன்று திடீரென தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதிகளில் வலம் வந்த நஜூகானை பொதுமக்களே பிடித்து அடித்து உதைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்
இதனை தொடர்ந்து தண்டையார்பேட்டை காவல்துறையினர் நஜூகானை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்