வட சென்னை பகுதிகளில் ராயபுரம் ஆர்கே நகர் திருவொற்றியூர் தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் மழைநீர் வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது வீட்டிற்குள் வசிக்க முடியாமல் இருக்கும் நிலை உள்ளது இந்நிலையில் இன்று காலை முதல் வடசென்னை பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வுசெய்து வருகிறார்
வடசென்னை பகுதிகளான ராயபுரம் ஆர் கே நகர் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்
மழை வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் பின்னர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 1000 பேருக்கு உணவுகள் அவர்களுக்காக தேவையான நிவாரண பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்











