வடசென்னை பகுதி முழுவதும் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலை ஒட்டி வடசென்னை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பவர்களை தேடிவந்தனர்
துணை ஆணையாளர் சுப்புலட்சுமி மாற்றம் உதவி ஆணையாளர் தினகரன் ஆனந்தகுமார் தலைமையில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது இதில் வட சென்னை பகுதிகளில் ஆட்டோக்களில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை ஒட்டி தனிப்படையினர் உதவி ஆய்வாளர் விஜய் தலைமை காவலர் முருகேசன் காவலர் விமல் ஆகியோர் காசிமேடு ராயபுரம் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் ஆட்டோவை தேடி வந்தனர்
வலைத்தளங்கள் குற்றவாளிகள் என பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தி மணிகண்டன் என்ற குடுமி மணி பிரபாகரன் என்ற காசி ஆகியோர் ஆட்டோக்களில் கஞ்சா விற்பனை செய்வதாக கண்டறிந்து அவர்களிடம் சோதனை நடத்தினர்
இதில் எண்ணூர் காவல் நிலையத்தில் சுமித்ரா என்ற பெண்ணையும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் என்ற குடுமி மணி மற்றும் பிரபாகரன் என்ற காசி திவ்யபாரதி மஞ்சுளா என்ற நான்கு பேரை கைது செய்தனர் இதேபோன்று காசிமேடு N-2 காவல்நிலையத்தில் சுப்பிரமணி திலகவதி குணசேகரன் அழகுராஜ் முத்தழகன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர் இதில் ஆண்கள் மொத்தமாக கஞ்சா புகையிலை பொருட்களை வாங்கி பெண்களிடம் கொடுத்து சிறிய பாக்கெட்டுகளாக உருவாக்கி எண்ணூர் திருவொற்றியூர் காசிமேடு ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது
ஒட்டுமொத்தமாக 4 பெண்கள் உள்பட 10 பேரை கைது செய்ததில் 5 கிலோ கஞ்சா 13 செல்போன்கள் ரொக்கப்பணம் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பேக்கிங் செய்வதற்காக பயன்படுத்திய எடை மிஷின் பேக்கிங் கவர் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி குற்றவாளிகள் 10 பேரையும் நீதிமன்ற காவலில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்












