ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்- தமிழக அரசு உத்தரவு;

0
135

நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது… இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 5-ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.. இதனால் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் கடந்த மாதம் முதலே எழுந்தது மேலும், அடுத்த மாதம் வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, இந்த மாதமே வழங்குமாறு அரசுக்கு சில கோரிக்கைகளும் எழுந்தன. பட்டவர்த்தனமாக தெரிந்த வீக்னஸ்.. சிஎஸ்கே இதை மட்டும் செய்தால் போதும்.. தோனிக்கு காத்திருக்கும் சவால் பச்சரிசி காரணம், ரேஷனில் வழங்கப்படும் பச்சரிசி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி, பல வீடுகளில் தீபாவளிக்கு இனிப்பு மற்றும் பலகாரம் செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுப்பது வழக்கம்.. மேலும், இம்மாத இறுதியில் இருந்தே பலரும் சொந்த ஊர் செல்ல தயாராகி விடுவார்கள். இதனால், தீபாவளிக்கு முந்தைய நாட்களில், பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படும என்பதால், ரேஷனில் அடுத்த மாதம் வழங்க வேண்டிய உணவு பொருட்களை, இந்த மாதத்திற்கு உரிய பொருட்களுடன் சேர்த்து வழங்குமாறு அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழக அரசு இந்நிலையில் தமிழக அரசு அதிரடி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குபவர்கள் பயன்பெறும் வகையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது… அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையில் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அட்டைதாரர்கள் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்‌ தலைமையில்‌ 11.10.2021 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில்‌, 2021 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ நவம்பர்‌-2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ அதிகபட்சமாக முன்நர்வு முழுமையாக முடிக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் மேலும்‌ 01.11.2021, 02.11.2021 மற்றும்‌ 03.11.2021 ஆகிய தினங்களில்‌ நியாயவிலைக்‌ கடைகள்‌ காலை 8 மணி முதல்‌ மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உணவு மற்றம்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி சிறப்பு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ நவம்பர்‌ மாதத்திற்கான அதிகபட்சமாக முன்னதாகவே முழுமையாக முடிக்கப்பட வேண்டும்‌. எச்சரிக்கை மேலும்‌ 1.11.2021, 02.11.2021 மற்றும்‌ 03,11.2021 ஆதிய தினங்களில்‌ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகள்‌ காலை 8 மணி ருதல்‌ மாலை 7 மணி, வரை திறந்து குடும்ப ‌அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்‌ வழங்கப்படுவதை‌ உறுதிசெய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்க மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மாதம் ஏற்கனவே எச்சரித்திருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here