முதுமை-பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு… இது சமர்ப்பணம்!

0
172

*முதுமை*

*பிள்ளையை… பெண்ணை… பெற்று, வளர்த்து, படிக்க வைத்து…, ஆளாக்கி…, மணமுடித்து… வைக்கிறோம்!*

*வேறு ஊரில்…, வேறு மாநிலத்தில்…, வேறு நாட்டில்… வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்…*

*இங்கு… 70 வயதிற்கு மேல்… வாழ்ந்த வீட்டிலேயே தனிமை…*
*இங்கு தான் என் மகள் படிப்பாள்…*
*இங்கு தான் விளையாடுவாள்…*

*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இது தான்…*
*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து….*

*என்ன சமைப்பது?…*
*என்ன சாப்பிடுவது?…*
*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*
*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது…*

*தனிமை… வெறுமை…*

*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்…*
*பயணம் ஒரு கொடுமை…*
*லோயர் பர்த் கிடைக்கவில்லை – என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்…*

*சென்னை சென்ட்ரல் – போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகி விட்டது…*

*ஓலாவும், ஊபரும்…*
*நமக்கு தேவைப்படும் நேரத்தில்*,
*பீக் அவர் சார்ஜ்*
*போட்டு களைப்படைய*
*செய்கின்றனர்*…

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்….*

*இன்று சென்ட்ரலில், அரை அடி படி ஏற… இறங்க… கைப்பிடி கேட்கிறது…*

*எஸ்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்…*

*வாட்ஸ் ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*

இவை வேண்டாமென ஒதுங்கி…

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்…*
*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்*…
*என்றால்*…

அந்த நேரம் அவர்கள்…

*ஏதோ ஒரு மாலில்…*
*ஏதோ ஒரு ஓட்டலில்…*
*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்…*
*பிசியாக இருப்பார்கள்…*

*”ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா…” என்பார்கள்…*
*”இல்லை” என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்…*
*நாலு நாள் கழித்து…*
*”எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?” என்று கேட்பர்…*

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்!!…

*அவர்கள் டைமிற்கு…*
*நம் தூக்க நேரம்…*
*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

*நமக்கு பேரப்பிள்ளைகளின் மேல் பாசம் இருக்கும்*….

அவர்களுக்கு நம்மிடம் இருக்காது!!

*மூன்று வயது வரை தான் தாத்தா… பாட்டி… என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்*…

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்…*

*அவன் வெளியே விளையாடறான்…*

*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்…*
*அவன் டியூஷன் போயிருக்கான்…*
*யோகா போயிருக்கான்…*
*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்…*

*எப்போதாவது குழந்தை முகம்… ஃபோனில்… வீடியோ காலில்…*முகத்தைக்* *காட்டி… ஹாய்… என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு…*
*ஓடி விடும்…*

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?…*

*நமது பண்பாடு… கலாச்சாரம்… தாத்தா பாட்டி உறவுகள்…*
*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!…*
*எத்தனை நேரம் தான் டிவி பார்ப்பது…?*

*இந்த அரசியல்களும்…*
*இந்த பொய்களும் BPயை*
*உயர்த்துகின்றன!…*
*என் சொந்த வீடே… எனக்கு அனாதை இல்லமாகிப் போனது…*

*ஏதோ… வாட்சப்… Facebook… இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது…!*
*மகனும், மகளும் போடும் Status- தான்… என் அன்றாட சுவாரசியங்கள்…*

*”எப்படிப்பா இருக்கே?” என்று மற்றவர்கள் கேட்கும் போது…*

( விட்டுக் கொடுக்க முடியுமா… என் பிள்ளைகளை!!…)

*”எனக்கென்னப்பா… ஜாம் ஜாம்ன்னு… பசங்களோட…, பேரனுங்களோட… அட்டகாசமா…”*
( மனதுக்குள் “ஏதோ”…)
*வாழ்கிறேன்!*

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு… இது சமர்ப்பணம்!!!*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here