முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஆவின் பால் விலை குறைப்பு. அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்!

0
275

ஆவின் பால் லிட்டர் ரூபாய் 3/- குறைப்புக்கான விற்பனையை பால் வளத்துறை அமைச்சர். சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார், இரண்டாவதாக மக்களின் நலன் , ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது , முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை துவக்கி வைத்தார்.
விற்பனை விலை:-
இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து நேற்று முதல் ஆவின் பால் பெற்றுக்கொள்ளலாம். இந்த விலை பட்டியல் 16.ம்தேதி முதல் அமலுக்கு வருகின்றது.
எனவே தற்பொழுது நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைக்கு உண்டான வித்தியாச தொகையை அடுத்த மாதம் பால் அட்டை விற்பனை செய்யும் போது ஈடு செய்யப்படும்.மேலும் தற்பொழுது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது மக்களுக்கு சென்னை முழுவதும் எவ்வித தடையுமின்றி பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க ஆவின் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்கு விநியோகம் செய்வதற்காக இணயதள சேவையான zomatoo மற்றும் dunzo மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் நந்தனம் மேலாண்மை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:044-23464575, 23464576, 23464578 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3300 எனவே இதனை பொது மக்கள் அணைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு பால் வளத்துறை அமைச்சர் சா. மு. நாசர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஆவின் மேலாண்மை இயக்குநர் . இரா.நந்தகோபால் இணை நிர்வாக இயக்குநர் .முருகேசன் ஆகியோரும் ஆவின் பொது மேலாளர் (விற்பனை) .ரமேஷ்குமார் பொது மேலாளர் (நிர்வாகம்) மு.பொற்கொடி உதவி பொது மேலாளர்கள் (விற்பனை) மற்றும் ஆவின் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here