மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய மூன்று பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார்;

0
60

மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய மூன்று பள்ளிகளில்
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள், 516 மாணவர்களுக்கு எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார்..திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட மூன்று பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ராமமூர்த்தி, மரகதம், விஜயம், உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ்உதயன், பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர்,ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கலந்து கொண்டு
மாணவர்களிடையே உரையாற்றி பதினோராம் வகுப்பு கல்விபயிலும் 516 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார், இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் ரஜினிகாந்த், செந்தமிழ் ராஜ், சசிகுமார், ஆசிரியர் ரஞ்சிதம், உடற்கல்வி ஆசிரியர் ஜோதி, ராஜேஷ் கண்ணா,பவானி,உள்ளிட்ட ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here