நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் திரு. செ.முத்துச்செல்வன் அவர்கள் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு பணி இடமாறுதல் பெற்றுள்ளார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு.சுசீலாபாய் அவர்கள் வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்கள். கணிதத் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் ரா. வீரபத்திரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் நேரில் சென்று வாழ்த்தினார்கள்.











