மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி என்கின்ற பெயரில் காயல் அப்பாஸ் தலைமையில் புதிய அரசியல் கட்சி 08-11-2021 இன்று முதல் ஆரம்பித்து அதன் கொடியும் அறிமுக படுத்தியுள்ளார் .
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் கொள்கைகள் !
1) புற்றீசல் போல் பரவிருக்கும் ஊழலுக்கு எதிராக பாடுபடுவோம் ,
2) மக்களின் அடிப்படை தேவையான வசதிகளை செய்து தர கோரி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக சம்பந்த பட்ட அரசு அதிகாரிகளிடம் முறையாக மனு கொடுத்தல்.
3) சிறுபான்மை மக்களுக்கும் சாமானிய மக்களுக்கும் தலீத் சமுதாயத்தவருக்கும் அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்க பட வேண்டும்,
4) பொதுமக்களிடம் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக முறையான தீர்வுகான படுதல் .
5) மாநில சுயாட்சி தத்துவத்தை உயர்த்திபிடித்தல் ,
6) ஒடுக்க பட்ட மக்கள் தங்களின் உரிமைகளை பெற முடியாத அடிதட்டு மக்களின் உரிமைகளை வென்று எடுக்க பாடுபடுவோம் ,
7) மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக மக்களுக்கு நல திட்ட உதவி , மற்றும் நிவாரண உதவி வழங்குதல் ,
8) தாழ்த்த பட்ட , பிற்படுத்தப்பட்ட , மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்க்காக பாடு படுவோம் .
9) சாதி – மத – இன வெறி இவைகளுக்கான எதிராக களம் கண்டு மனிதநேயத்தையும் , சமத்துவத்தையும் நிலை நாட்ட பாடு படுவோம் .
10) மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக பாராளுமன்றம், சட்டமன்றம்,உள்ளாட்சி,ஆகிய அணைத்து தேர்தலிலும் நிர்வாகிகளை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற செய்வதே நோக்கம் .
11 ) ஜாதி,மத,பேதமின்றி அணைத்து சமூகத்தினருக்கும் அரசியல் அங்கிகாரத்தை பெற்று தருவதே மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் நோக்ம் !
சுய நலம் இல்லாமல் பொது நலத்துடன் அனைத்து சமூக மக்களுக்காக பணியாற்றுவதே மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் நோக்கம் என்பதை காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .