சென்னையில் போதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் வட சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் வண்ணாரப்பேட்டை கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை ஆணையர் சக்திவேல் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் துணை ஆணையர் சதாசிவம் அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் 1வது தெருவை சேர்ந்த கணேஷ் என்கின்ற பீஸ் கணேஷ் (21) என்பவரை போலீசார் பிடிக்கச் சென்றனர் அப்போது போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்ற கணேசை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர் அப்பொழுது அவர் வீட்டில் சோதனை செய்தபோது போதை மாத்திரை வைத்திருப்பது தெரிய வந்தது அதனை பறிமுதல் செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கொருக்குப்பேட்டை மீனம்பாக்கம் நகர் மேம்பாலம் கீழே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கிருந்து 3 பேரை கைது செய்தனர் ஒருவர் தப்பி சென்று விட்டார் மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் தண்டையார்பேட்டை நேரு நகரை சேர்ந்த ரஞ்சித் என்கின்ற பாம்பு ரஞ்சித் (27 )இவருடைய தம்பி ராஜேஷ் என்கின்ற சின்ன பாம்பு ராஜேஷ்( 22) ஆகியோரை பிடித்து அவர்கள் வீட்டில் சோதனை செய்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரை வைத்திருந்தது தெரிய வந்தது மேலும் அவரிடம் இருந்து மூன்று கத்தி ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் செங்குன்றம் காவாங்கரை சேர்ந்த உதயகுமார் (21) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் இவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது இதனுடைய மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது இவரிடம் இருந்து மூன்று கத்திகள் ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்து நான்கு பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் ஆர்கேநகர் போலீசார் அடைந்தனர் மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகிறார்கள்