பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தகாத உறவு வைத்த நபர் கைது:

0
61

திருவொற்றியூர் பிப்.3

சென்னை: திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சரண்யா வயது 38, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது குடும்ப நல நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது இந்நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சரண்யா கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு பழக்கமான யுவராஜ் உடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் சரண்யாவிடம் திருமணம் செய்து கொள்வதாக யுவராஜ் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தகாத உறவு வைத்துள்ளார். சில நாட்கள் முன்பு சரண்யா யுவராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் யுவராஜ் திருமணம் செய்ய மறுத்துள்ளார் அது மட்டும் அல்லாமல் யுவராஜ் கவிதாவை தொடர்ந்து அடித்து மிரட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சரண்யா திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் யுவராஜை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்திய பின்னர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் பதிவு செய்து யுவராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here