நவராத்திரியில் ஏன் அகண்ட தீபம் ஏற்ற வேண்டும்?
நவராத்திரியின்போது சூழலில் தேவியின் சக்தி ரூபமான தேஜதத்துவ அதிர்வலைகளின் சஞ்சாரம் அதிகரிக்கிறது. தீபம் தேஜதத்துவத்தை குறிக்கிறது. அதனால் தீப ஒளியால் தேஜதத்துவம் ஆகர்ஷிக்கப்படுகிறது. தீபமேற்றுவதால் வாஸ்துவிலும் சூழலிலும் தேஜ அதிர்வலைகளின் சஞ்சாரம் அதிகமாகி தேஜ தத்துவமும் அதிகரிக்கிறது. பக்தர்களுக்கு அதனால் நன்மை உண்டாகிறது. அதனால் நவராத்திரியின்போது அகண்ட தீபம் ஏற்றுவது மிக முக்கியமானது. எண்ணெய் தீர்ந்ததாலோ, காற்றினாலோ தீபம் அணைந்தால் உடனே ஏற்றி, அதற்கு பரிகாரமாக 108 முறை அல்லது 1000 முறை தேவியின் நாமஜபத்தை செய்யுங்கள். நவராத்திரி சமயம் நடுவில் யானையின்
சித்திரத்தை வைத்து பெண்கள் சுற்றிலும்
கை கோர்த்து நின்று கொண்டு கும்மியடிக்கும்
வழக்கம் உள்ளது. இதன் ஆன்மீக சாஸ்திரம் என்ன?
(கும்மியடித்தல் என்பது நவராத்திரியில் செயல்பாட்டிலுள்ள ஸ்ரீதுர்காதேவியின் லக்ஷ்மி ரூபத்தை பிரார்த்தனை செய்து லக்ஷ்மி தத்துவத்தின் ஸேவகனான யானையை பூஜை செய்வது ஆகும்) நவராத்திரி காலத்தில் ப்ரம்மாண்டத்தில் ஸ்ரீ துர்காதேவியின் செயல்படும் சக்தி அதிர்வலைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. லக்ஷ்மிதத்துவத்தின் தூதுவனாக யானை கருதப்படுகிறது. ஸ்ரீ கணபதி தத்துவத்தின் அம்சம் யானையில் உள்ளது. அதோடு லக்ஷ்மி தத்துவத்தின் சின்னமாக யானை விளங்குவதால் எப்பொழுதும் விஷ்ணுலோகத்தில் அதன் வாஸம் உள்ளது. கும்மியடித்தல் என்பது நவராத்திரியில் எப்பொழுதும் செயல்பாட்டிலுள்ள ஸ்ரீ துர்காதேவியின் லக்ஷ்மி ரூபத்தை வீட்டில் நிலைத்திருக்கச் செய்ய பிரார்த்தனை செய்து ஆவாஹனம் செய்வதாகும். இதற்காக லக்ஷ்மி தத்துவத்தின் தாஸனான, தூதுவனான யானையை பூஜை செய்து அதன் மூலம் லக்ஷ்மி தத்துவத்தை விழிப்படையச் செய்ய முடிகிறது. லக்ஷ்மி தத்துவத்தை விழிப்படைய செய்வதன் மூலம் விஷ்ணு தத்துவத்தின் பலனைப் பெறுவதே கும்மியடித்தலின் முக்கிய நோக்கம். யானையிடமிருந்து வெளிப்படும் அதிர்வலைகளில் ப்ருத்வி தத்துவமும் தேஜ தத்துவமும் அதிக அளவில் உள்ளன. யானையின் வடிவத்தை பூஜை செய்வதால் ப்ரம்மாண்டத்தில் லக்ஷ்மி தத்துவத்திலுள்ள ப்ருத்வி மற்றும் தேஜ அதிர்வலைகள் விழிப்படைகின்றன. லக்ஷ்மி தத்துவத்திலிருந்து வெளிப்படும் தனதான்ய செழிப்பைத் தரும் அதிர்வலைகள் யானையின் தும்பிக்கை வழியாக முழு ப்ரம்மாண்டத்திலும் பரவுகிறது; அதனால் நவராத்திரி காலத்தில் யானையை மகிழ்வித்து அதன் மூலமாக லக்ஷ்மி தத்துவத்தின் அருள் பார்வை சம்பாதிக்கப்படுகிறது. நவராத்திரி சமயம் பயிரிடுவதற்கு ஏற்ற ஸாதகமான காலமாகும். இக்காரணத்தால் லக்ஷ்மியின் இருபுறமும் தும்பிக்கையை உயர்த்திய நிலையில், அதாவது செயல்படும்