இன்று தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசி;

0
42

*மஹாளய பட்சம் சோபகிருது ஆண்டு புரட்டாசி 27-ந் தேதி 14.10.2023 சனிக்கிழமை அமாவாசை திதி*

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதுதான்

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் 7 தலைமுறை பயன்பெறும் . பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து அதனால் 7 தலைமுறை க்கு சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.

மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

எத்தகைய தோஷம் சாபம் இருந்தாலும் ஒருவரைக் காப்பாற்றுவது அவரின் முன்னோர்களின் ஆசிதான் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

*பித்துருதோஷம்எதனால்ஏற்படுகிறதுமற்றும்பரிகாரம்செய்வதுஎப்படி?*

தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்துரு தோஷம்.

*தோஷம் வரக்காரணம் :*

1.கருச்சிதைவு

2. பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.

3.இளைய தாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.

4.தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.

5. *ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர், ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.*

6. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயாசென்று கூபசிரார்த்தம் செய்யாவிடில் பித்துரு தோஷம் வரும்.

குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்துருக்கள் என்கிறோம்.அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்துருதோஷம்.

*ஜாதகத்தில் கண்டறிவது :*

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்துருதோஷம் உண்டு.

*பரிகாரம் :*

ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும்,காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும் , திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம்.

*திலஹோமம் :.*

குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டும் தில்ஹோமம் செய்ய வேண்டும்.
அனைவரும் இயற்கை மரணம் அடைந்திரிந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.

*தோஷ்த்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் :*

தோஷம் உள்ளவர்களுக்கு

1.திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும்.
விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இராது.அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.

2. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை.மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.

3.ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

4. கலப்புத்திருமணம் , ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிஷ்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப்பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்துருக்களும், பித்துரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்துருக்களின் சாபம் கடவுள் நமக்கு தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மையுடையது.

எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் …
ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் …

ஞானம் பெபெற்றவரிடம்உண்மையின்நறுமணம்இருக்கும

தானத்தின்மகிமையைஅறிவோம்..

*தான தர்ம விஷயங்கள்..*

”பீஷ்ம பிதாமகரே , எந்த தானம் சிறந்தது. பிராமணர்களுக்கு திருப்தி அளிப்பது அவற்றில் எது? அதால் என்ன பயன் கிடைக்கும்?” என்று யுதிஷ்டிரன் கேட்டான்.

”யுதிஷ்டிரா. இந்த கேள்வியை நீ மட்டும் கேட்டாய் என்று நினைக்காதே. உனக்கு முன் நானே இதை நாரதரிடம் கேட்டிருக்கிறேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா? கேள்:

”உணவு ஒன்றே அனைவரும் விரும்புவது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதார தேவை அது. அன்னதானத்துக்கு ஈடானது
எதுவுமில்லை. உலகமே இயங்கும் சக்தி அதில் தான் உள்ளது.

பித்ருக்களுக்கு ச்ராத்தம் என்பது கூட அவர்களுக்கு தேவையான உணவை வருஷத்துக்கு ஒருமுறையாவது பிண்டமாக அளிப்பதே. எள்ளும் நீரிலுமே மனமுவந்து அவர்கள் சந்ததியை வாழ்த்துகிறார்கள்.

இந்த ஒரு தானத்தில் தான் பெறுபவன் முழுதும் திருப்தி அடைய வழி உள்ளது. அவன் போதும் என்று சொல்வது இந்த ஒரு தானத்தை பெறும்போது மட்டும் தான்.

யுதிஷ்டிரா, ஒரு தரம் தேவகியும் நாரதரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நாரதர் தானம் கொடுக்கும் சிறந்த காலங்களை விளக்கினார்.

1 கிருத்திகை அன்று நெய் பாயசம் தானம் செய்தவன் பரம சந்தோஷம் பெறுவான்.

2.ரோஹிணியில் அன்ன தானம் செய்தால் – கடன் தொல்லை தீரும்

3.மிருகசீரிஷத்தில் – கோ தானம் கன்றுக்குட்டியுடன் செய்பவன் விஷ்ணு லோகம் செல்கிறான்.

4.புனர்பூசத்தில் இனிப்பும் உணவும் தானமும் செய்பவன் சிறந்த புகழ், பெருமை, அழகை பெறுகிறான்.

5. பூசத்தில் தங்கம் ஒரு பொட்டாவது தானம் செய்பவன் தேக காந்தி பெறுகிறான்.

6. ஆயில்யத்தில் வெள்ளியில் நந்தி, (காளை உருவம்) தருபவன் பயத்திலிருந்து விடுபட்டு செல்வம் அவனிடம் சேர்கிறது.

7,மகத்தில் மண்பாத்திரத்தில் எள் தானம் செய்பவன் புத்ர சந்தான அபிவிருத்தி பெறுகிறான்.

8. உத்தரத்தில் பால் சாதம் வழங்குபவன் புண்யம் கூடுகிறது.,

9. ஹஸ்தத்தில் தானம் கொடுக்க நம்மால் முடியாது. யானை தானம் செய்ய சொல்கிறாரே .

10. சித்திரையில் வாசனை திரவியம் தானம் செய்பவன் கந்தர்வன் ஆகிறான்.

11.ஸ்வாதியில் காசு தானம் செய்பவன் இந்திரனோடு வாசம் செயகிறான்.
நாரதர் தேர் குதிரைகள் தானம் செய்ய சொல்வதைப் பற்றி நான் அதிகம் சொல்ல போவதில்லை.நம்மால் முடியாது.

12. அனுஷத்தில் வஸ்திர தானம் செய்பவன் ஸ்வர்கத்தில் நூறு யுகம் இருப்பானாம்.

13.மூலத்தில் பழங்கள், கிழங்குகள் கொடுப்பவன் பித்ருக்களின் ஆசியை பெறுகிறான்.

14 உத்தராடத்தில் பார்லி ஜலம் , நெய் ,கரும்புச்சாறு கொடுத்தவன் விண்ணுலகத்தில் வெள்ளைத் தேரில் ஏறி பயணம் செய்வானாம்.

15. அவிட்டத்தில் போர்வை கொடுத்தவன் பசுக்கள் நிறைய பெறுவான்.

சில தான வசதிகள் எதிர்பார்ப்புகள் பற்றி மட்டுமே உதாரணமாக கொஞ்சம் மட்டுமே மேலே சொன்னேன். இன்னும் நிறைய இதுபோல் இருக்கிறது.

நமக்கு கொடுக்க தான் ஒன்றும் கிடைக்கவில்லை. வெள்ளைத் ”தேரில்” தெருவில் போக முடியாது. போவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. வெள்ளைக் ”காரில்” (வெள்ளைக் காரன் மேல் இல்லை) ஏறிக்கொண்டு போக வேண்டுமானால் முடியலாம்.

”தானங்களை பற்றி சொல்லும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது சொல்கிறேன் கேள்” என்கிறார் பீஷ்மர்.

யமன் தன்னுடைய தூதனை கூப்பிட்டு ”கங்கை யமுனைக்கு இடையே ஒரு பிரதேசம் உள்ளது. அங்கே நிறைய ப்ராமணர்கள் வசிக்கிறார்கள். அங்கே அகஸ்தியர் வம்சத்தை சேர்ந்த சர்மின் என்ற வேதங்கள் கற்று உபதேசிக்கும் ரிஷி ஒருவர் இருக்கிறார்.

அவரைப் போலவே மற்றொருவரும் அதே கல்வி கேள்வி ஞானத்தோடு அருகே அதே ஊரில் வசிக்கிறார். ஆளை மாற்றி கொண்டு வந்துவிடாதே.

சர்மினைக் கொண்டுவரும்போது மற்றவர்கள் போல் கயிற்றால் இழுத்துக் கொண்டு வந்து விடாதே. பவ்யமாக நமஸ்கரித்து மரியாதையோடு அழைத்து வா.அவரிடம் சில விஷயங்கள் கேட்டுவிட்டு அவரைத் திரும்ப கொண்டுவிட வேண்டும் ”

யமதூதன் எதிர்பார்த்தபடியே தவறாக மற்ற பிராமண ரிஷியை அழைத்துக் கொண்டுவந்து விட்டான். பிராமண ரிஷியை எழுந்து வணங்கி யமன் வரவேற்றான். தூதனை அழைத்தான். ”சொல்லி அனுப்பியும் தப்பாகவே செயகிறாயே. இவரை கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சர்மினை அழைத்து வா ” என்று சொன்னான்.

வந்த பிராமண ரிஷி யமனைப் பார்த்து ” யம தர்மா, எனக்கு பூலோகத்தில் வேதங்களை எல்லாம் கற்று மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் வேலை முடிந்து விட்டது. உன் கணக்குப் படி நான் இன்னும் எவ்வளவு காலம் பூமியில் இருக்கவேண்டுமோ அதை இங்கேயே கழித்து விடுகிறேனே” என்கிறார்

”ப்ராம்மணோத்தமரே, எனக்கு உங்களுக்கு எவ்வளவு காலம் அங்கே இருக்கவேண்டும் என்று தெரிந்து கொள்ள கட்டளை இல்லை. உங்கள் காலம் முடிந்த பிறகு மட்டுமே நான் அறிபவன். உங்கள் புண்ய பாப கர்மாக்களுக்கு தக்க வாறு இங்கே இடவசதி அளிப்பவன்.

ஆகவே உங்கள் காலம் முடிவுக்கு வரும் வரை இங்கே உங்களை அனுமதிக்க இயலாது. ஆகவே உங்களை இவன் திரும்பக் கொண்டு செல்வான். வேறு ஏதாவது கேட்கவேண்டுமானால் கேளுங்கள் ” என்றான் யமன்.

”எம தர்மா, எதைச் செய்வதன் மூலம் ஒருவன் மூன்று உலகிலும் உயர்வும் மேன்மையும் பெறுகிறான்?”

”எள் தானம் தான் சிறந்தது. அதனால் கிடைக்கும் மேன்மை மற்றதற்கில்லை. உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் எள் தானம் செய்பவன் நினைத்ததை எல்லாம் அடைவான். ஸ்ராத்தங்களில் எள்ளுக்கு மிகவும் பிரதானம். அதை தானமாக அதனால் தான் கொடுக்கிறார்கள்.

பிராமணர்களுக்கு எள் தானம் நிறைய கொடு. அவர்களை துளியாவது எள்ளை சாப்பிட வை. (ஸ்ராத்தங்களில் எள்ளுருண்டை அவசியம் இதனால் தான்!) விசாக பவுர்ணமி அன்று பிராமணர்களுக்கு எள் தானம் பண்ணுவது உயர்ந்தது.

அதே போல் தண்ணீர்,

விளக்குகள் ஆகியவற்றையும் நிறைய தானம் பண்ண வேண்டும்.” என்றான் யமன்.

பண்டை காலத்தில் பிரபுக்கள், ராஜாக்கள் எல்லாம் நிறைய குளம் குட்டை, ஏரிகளை வெட்டி நீர் நிலைகளாக்கினார்கள். ஜல தானம் சுபிட்சத்தை தந்தது. ( நாம் அவற்றை தூர்த்து விட்டு விற்று காசு பண்ணுகிறோம். வீடு கட்டுகிறோம். வெள்ளத்தில் மூழ்குகிறோம் )

யம தூதன் அந்த பிராமணனை எங்கிருந்து கொண்டுவந்தானோ அங்கே விட்டுவிட்டு சர்மினை அழைத்து வருகிறான். சர்மினை வணங்கி யமன் அவனிடம் தனது சில சந்தேகங்களை நிவர்த்தி செய்துக்கொண்டு சர்மினையும் திரும்ப கொண்டு விடச்சொல்கிறான்.

சர்மினுக்கும் எள், தண்ணீர், விளக்கு தானங்கள் பற்றி எமன் விளக்குகிறான். சர்மின் மற்றும் அவனுக்கு பதில் தவறாக யமனை சந்தித்த பிராமண ரிஷி இருவருமே பூமிக்கு திரும்பியவுடன் நிறைய எள் , நீர், விளக்கு தானம் செய்ய எல்லோருக்கும் அறிவுரை வழங்கினார்கள்.

*கன்னிகாதானம் என்றால் என்ன?*

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால்,

தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி. ‘தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..’ என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனயும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால்,

அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் உணர்த்துகிறது.

கர்மாக்களை கழிக்க – அகத்தியர் கர்மகாண்டம் நூலில்இருந்து .

உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்…

(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)

தானியங்கள் வைத்தால் = 5 % (-)

(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)

(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)

(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)

(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)

(6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)

(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)

(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)

(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு கொடுத்தால் = 86% (-)

(10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)

(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)

(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-)

(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)

(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)

(15)நோயளிகளுக்கு = 93% (-)

(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)

(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.

சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

(1)கோயில் மயில்களுக்கு

(2)கோயில் காகத்திற்கு

(3)கோயில் சேவல்களுக்கு

(4)கோயில் யானைகளுக்கு

(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு

(6)கோயில் பூசாரி

(7)பிராமனர்களுக்கு உணவு

(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு

(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல்

(10)அன்னதானத்திற்கு உதவுதல்

(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்

(12)கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்

(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு

(14)இறைவனுக்கு பூ மாலை

(15)முன்னோர்கள் வழிபாடு

(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி

(17)ஏழை மாணவர்கள் படிக்க

(18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,

மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம்.

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ,

இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை.

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை.

அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.
– அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து…..

பிச்சைக்கும், பிக்ஷைக்கும் உள்ள
வித்தியாசம்…

பிச்சைக்கும், பிக்ஷைக்கும் நிறைய
வித்தியாசம் உள்ளது.

இதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

“பிச்சை”
என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும்.

ஆனால்,
“பிக்ஷை”யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும்.

விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது “பிச்சை”.

சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறிவிட்டு துறவு கோலம் பூண்டு எடுப்பது “பிக்ஷை”.

பிச்சை இடுவது என்பது கருணை,
ஆனால் பிக்ஷை நமது கடமையாகும்.

பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால் புண்ணியம் மட்டும் சேராமல் போகும்,

பாவம் ஒன்றும் இல்லை,
ஆனால் பிக்ஷை இடாது போனால், பாவம் பின்தொடரும்.ஏனென்றால், பிக்ஷை வாங்குபவர், நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் வாங்குவதில்லை,
கூடவே சேர்ந்து நமது பாவத்தையும் பெற்று செல்கிறார் என்பார்கள்.இப்படி
பிச்சைக்கும், பிக்ஷைக்கும் உள்ள வேற்றுமைகளை புரிந்துகொள்ளவேண்டும்.பிச்சை இடுங்கள் ,
பிக்ஷை கொடுங்கள்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here