தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் திருவொற்றியூர் கிளை சார்பில் ஜன.26 அன்று காலை சமத்துவப்பொங்கல் விழாவும் மக்கள் கலைவிழாவும் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் சிறப்பாக நடைபெற்றது. காலையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சென்னை மா நகராட்சியின் மாமன்ற உறுப்பினரும், தி.மு.க மண்டலக்குழு தலைவ ருமான தி.மு.தனியரசு கலந்து கொண்டு சிறப்பித்தார். பறையிசைசிலம்பாட்டம்மயிலாட்டம், ஒயிலாட்ம் கரககாட்டம் ,பரதநாட்டி யம் உள்ளிட்ட நிகழ்த்து கலைகளை பேரா.காளீ ஸ்வரன் கலைக்குழுவினர் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் சமூக செயல்பாட்டாளரும் வியாபாரிகள் சங் கத்தின் பொறுப்பாளருமான ஜி.வரதராஜன் உள்ளிட்டோரின் ஆசிகளோடும் நடத்தி மகிழ்வித்தனர் ஆதிமாறன் மற்றும் ஜீவா கலைக்குழுவினர் சமூக விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். கலை இலக்கிய பெரும ன்றத்தின் சென்னை மாவட்ட செயலாளர் பேரா. கணபதி இளங்கோ, செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, மாநிலக்குழு உறுப்பி னரும்,திருவொற்றியூர் கிளை மதிப்புறு தலைவருமான இதழாளர் இசை க்கும்மணி, காஞ்சிமாவ ட்டக்குழுவின் மோகன் ராம்,கிளைத் தலைவர் கோவிந்தராஜுலு, செயலாளர் பேரா.செல்வ மீனா பொருளாளர் கவிஞர் அருள்மணி உள்ளிட்டோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினர் மணலி கிளை செயலாளர் பேரா.யாழினி முனுசாமி திருவொற்றியூர் கட்சிக் கிளை பொறுப்பாளர் கள் ஜெயராமன், சந்திர சேகர் வடசென்னையின் மேநாள் மாவட்டசெயலர் எம்.எஸ்.மூர்த்தி, சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் எம்.ரேணுகாகாவிரி செல்வம் ,இந்திய வழக் கறிஞர் சங்கத்தின் பொறுப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தேசிங் ,உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர்.