டிப்பர் லாரி மோதி 70 வயது பாட்டி உயிரிழந்தார்

0
200

வேலூர் மாவட்டம் குடியாத்தம்

வேலூர் பொய்கையை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த,சேகர் யுடைய மகன் தரணி என்பவர், ரவி என்பதற்கு சொந்தமான டிப்பர் லாரியை
பெருமுகையிலிருந்து குடியாத்தம் அடுத்த சீவூர் நோக்கி மணல் ஏற்றி கொண்டு வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் காத்தாடி குப்பத்திலிருந்து குடியாத்தம் நோக்கி ரத்தினம்மாள் (70) என்பவர் அவருடைய பேரனுடன் முதியோர் பென்ஷன் வாங்க வந்து கொண்டிருந்தபோது புவனேஸ்வரி பேட்டை என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டு ரத்தினம்மாள் உடைய இரு கால்களும் டிப்பர் லாரியின் சக்கரத்தில் மாட்டி கால்கள் நசுங்கி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இதனிடையே சிகிச்சை பலனின்றி ரத்தினம்மாள் இறந்தார் இதனை அடுத்து குடியாத்தம் நகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர் ராமு ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here