சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்க துணை நிற்போம் !

0
216

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்க துணை நிற்போம் !

பத்திரிகையாளர்களின் வேடந்தாங் கலாக இருக்க வேண்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றம், கயமைத் தனவர்களின் கூடாரமாக, ஜனநாயக முறைப்படி இயங்காத, தேர்தல் எது வும் நடத்தப்படாத ஒரு அமைப்பாக இருந்து வருவது வேதனைக்குரியது.

ஜனநாயக நடைமுறையற்ற அந்த பத்திரிகையாளர் மன்றத்தை, மீட் டெடுத்து சீரமைத்து, முறைப்படியான தேர்தல் நடத்தி, பத்திரிகையாளர் களின் புகலிடமாக பாதுகாக்க வேண் டும் என்கிற முயற்சிகள் இன்றைக்கு நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளுக் கும் மேலாகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

1999க்கு பிறகு கடந்த 25 ஆண்டுக ளாக தேர்தலே நடத்தப்படாமல் ஜன நாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்படாமல்,சில வெளிஆட் களால், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் தன்னிச்சையாக செயல்பட்டு வந்திருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யும் பத்திரிக் கையாளர்களுக்கு இது ஒரு அவமானகரமான காரிய மாகவே கருதப்படுகிறது.

பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு, மன்ற செயல்பாடுகளை வழி நடத்திடவேண்டும் .

பல ஆண்டுகளாக தற்காலிகமாக சுயேட்சையாக பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்களின் பிடியிலிருந்து நிர்வாகப்பொறுப்புகளை மீட்டெடுக் கப்பட வேண்டும்.

பத்திரிகையாளர் மன்றத்தில் நடத் தப்படும் பத்திரி கையாளர்கள் சந்திப் புகளுக்காக பெரிய அளவில் வசூலிக் கப்படும் வருமானமானத்துக்கு இது வரை எந்தவொரு கணக்கு வழக்கு களும் முன்வைக்கப்படாமல் இருப் பதை மாற்றி அமைத்திட வேண்டும்.

ஒரு சிலருக்கே அப்பெரும் வருமானம் பங்கு அளிக்கப்பட்டு வருவதையும் தடுத்து நிறுத்திடவேண்டும் உள்ளிட்ட இத்தகைய கோரிக்கைகள் ஏதும் இதுவரை செவி சாய்க்கப்படாமல், நீதிமன்ற தடை வழக்குகளாலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளாலும் தட்டிக் கழிக்கப்பட்டே வந்திருக்கின் றன..

பாரதி தமிழன் (எ) பெருமாள் தன்னிச் சையாக இணைச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொண்டு,உடன் சிலஅடியாட்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான வருமானத்தை பங்குபோட்டு கொண்டு, கண்துடைப்பு வேலைகளை செய்து வருவது கண்டி க்கத்தக்கது என்றே பத்திரிகையாளர் அனைவரும் குமறுகிறார்கள்.

மேற்படியான குற்றச்சாட்டுகள் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, ஜன நாயக முறைப்படியான தேர்தல் நடத்தப்பட்டு, வழிவகைகள் செய்திட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டும் ஏதொன்றும் சாத்திய ப்படுத்தப்படவில்லை.

மூத்த பத்திரிக்கையாளர்கள் இந்து ராம், நக்கீரன் கோபால், அறம் சாவித் திரி கண்ணன் உள்ளிட்டவர்கள் தலையிட்டு முறைப்படுத்த முயன்றும், நந்திகளாக இருந்து வரும் பாரதி தமிழன் (எ)பெருமாள் மற்றும் அவரது கைப்பிள்ளைகள் பணம் கொட்டும் மன்ற நிர்வாகத்தை விட்டுவிடத் தயா ராக இல்லை.

பணத்தை எண்ணி பைக்குள் வைப்ப திலேயே கவனமாக இருந்தவர்கள் , பத்திரிக்கையாளர் மன்ற வருடாந்திர கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்கா மலும் , பதிவுத்துறை மன்ற பதிவினை புதுப்பிக்காமலும், அலட்சியமாகவே இருந்து வந்துள்ளனர்.

ஹசின் முகமது, மூத்த பத்திரிகை யாளர் சி.ஜி.சேகர், தினகரன் மோகன் உள்ளிட்ட பல மன்றஉறுப்பினர்கள் மேற்படியான மீட்டெடுப்பு நடவடிக்கை களுக்கு முன்னின்று பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் அளிக்கவி ல்லை.

இவற்றையெல்லாம் தாண்டி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தி யாளர் செல்வராஜ் மற்றும் விமலேஸ் வரன் உள்ளிட்டோரின் தலைமைப் பொறுப்பிலுள்ள “சென்னை பிரஸ் கிளப் “அமைப்பு முறைப்படியான பதிவுத்துறை மன்ற பதிவினை பெற்று, நூற்றுக்கணக் கான மூத்த இளம் பத்திரிகையாளர் களை உறுப்பினர்களாக்கி, ஜனநாயக முறைப்படியான செயல்பாடுகளால் அனைத்து பத்திரிகையாளர்களையும் பத்திரிகையாளர் சங்கங்களையும் அரவணைத்துக் கொண்டு கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகிறது.

சென்னை பத்திரிகையாளர் மன்ற அதிருப்தி செயல்பாடுகளை எல்லாம் தோலுரித்து வெளிப்படுத்தி, பல சட்ட ரீதியான முயற்சிகளைமேற்கொண்டு பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெ டுத்தே ஆகவேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு வருகிறது.

பத்திரிக்கையாளர்கள் பலரின் ஆதரவு சக்திகளைஒன்று திரட்டி, பாரதி தமிழன் (எ )பெருமாள் மற்றும் அவரது அடியாட்களை சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர் வாகக் குழுவிலிருந்து வெளியேற்றிட வேண்டும் என்றும், மேலும் மன்றத் தின் சொத்துக்களான வருமானத்தை யெல்லாம் மீட்டெடுத் திடவேண்டும் என்றும் கங்கணம் கட்டி வந்துள்ளது.

மேற்படியான செயல்பாடுகளுக்காக அனைத்து ஆதரவு சக்திகளோடும் “சென்னை பிரஸ் கிளப்” அமைப்பு களம் இறங்கி இருப்பதை பத்திரிகை யாளர்கள் அனைவரும் வரவேற்று, உடனிருந்து ஆதரவு தெரிவித்து, மீட்டெடுப்புக்கு துணை நிற்பதும், இவற்றையெல்லாம் அரசின் கவனத் திற்கு கொண்டு செல்வதும் அத்தியா வசியமான கடமையாகும்.

பத்திரிகை ஊடகவியலாளர்கள் கூட்டுஇயக்கப் பேரவை
(UNITED FORUM OF MEDIA JOURNALISTS)

தமிழ்நாடு மூத்த பத்திரிகையாளர்கள் பேரவை
(TAMILNADU SENIOR JOURNALISTS FORUM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here