வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயின்று அரசின் நலத்திட்ட உதவிகளால் பயன்பெறுகின்றனர். – அமைச்சர் மதிவேந்தன்
முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 300 வட இந்திய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
அப்போது பேசிய அமைச்சர் மதிவேந்தன் ,தற்போது மும்மொழிக் கொள்கை பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது தமிழக எல்லையான ஓசூர் பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு வேலை செய்து வருகின்றனர் . அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் பயின்று அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு ,
தொடர்ந்து நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் . அதேபோல் வரும் தேர்தலில் உங்கள் ஆதரவு முழுமையாக எங்களுக்கு வேண்டும்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நமக்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் வகையிலும், நமக்கு வாக்களிக்காதவர்கள் இவருக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என வருந்தும் வகையிலும் நாம் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
அதன்படி தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறோம்.
திமுக கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் ஜெயின் , சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சாந்தி நாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். நிருபர்…விக்னேஷ்