சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பெயரை பயன்படுத்தி பண மோசடி.சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் ஜெகந்நாதன்(70). இவருடைய மகன் அருண் மெக்சிகோ நாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் அருண் ஷேர் மார்கேட்டில் (பிட்காய்ன்) பணம் முதலீடு செய்து லாபம் ஈட்டு தருவதாக கூறி சுமார் 80 லட்சம் ரூபாய் வரையில் பெற்று ஏமாற்றி விட்டதாகவும், இழந்த பணத்தை மீட்டு தங்களை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடந்த ஆண்டு நவம்பவரில் சென்னை காவல் ஆணையக அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.புகார் அளிக்கப்பட்டும் காவல் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்டாத நிலையில் தனக்கு பத்திரிக்கை நிருபர் என பழக்கமான தனசேகர் என்பவரிடம் இழந்த பணம் குறித்தும் காவல் ஆணையரகத்தில் கொடுக்கப்பட்ட புகார் குறித்தும் தெரிவித்துள்ளார்.
தனக்கு நேரடியாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பழக்கம் எனக்கூறி இதூகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜீவாலுடன் பேசி புகார் மீது நடவடிக்கை எடுத்து வைப்பதாக ஜெகந்நாதனை மூளை சலவை செய்து ரூபாய் 25 ஆயிரம் பணத்தை கேட்டுள்ளார்.
தனசேகர் கூறியதை நம்பிய ஜெகநாதன் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்த பின்னர் தனசேகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பேசிவிட்டதாகவும் கூறி காலம் தாழ்த்தி வந்த நிலையில், போலி பத்திரிக்கையாளர் என கிடைத்த தகவலால் தனசேகரும் தன்னை ஏமாற்றியது குறித்து ஜெகந்நாதன் உணர்ந்துள்ளார்.அதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அடையாறு காவல் நிலையத்தில் தனசேகர் மீது புகார் அளித்துள்ளார்.