சென்னை, ஆர்.கே.நகர். பகுதியில் நண்பர்களோடு கேக் வெட்டியதில் தகராறு- 5 இளைஞர்கள் கைது;

0
370

சென்னை, ஆர்.கே.நகர். காவாங்கரை பகுதியில் கொருக்குப்பேட்டை சேர்ந்த பரத் வயது19 பிறந்தநாள் கொண்டாடுவதற்காக தனது நண்பர்கள் விஜய் வயது 19, ஆனந்தன் வயது 21, குமார் வயது 21, மகேஷ் குமார் வயது 22 இவர்கள் 5 பேரும் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடினர். அப்போது கூச்சலிட்டபடி கேக் வெட்டி கொண்டாடினர். அருகில் வீட்டிலிருக்கும் குமார் என்பவர் பிறந்தநாள் கொண்டாடுவது தவறு கிடையாது. கூச்சல் இல்லாமல் கொண்டாடுங்கள் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த 5 இளைஞர்களும் செவி சாய்க்காமல் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மது அருந்திவிட்டு குமார் வீட்டில் கற்கள், பாட்டிலை தூக்கி எரிந்து கோஷமிட்டனர். உடனே குமார் ஆர்.கே.நகர். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஐந்து பேரையும் வழக்கு பதிவு புழல் சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here