கடையநல்லூர் அரசு மகளிர் பள்ளி துப்புரவு பணிக்கு நகர திமுக உதவி தலைமை ஆசிரியை அவர்களை சந்தித்தபின் செயலாளர்கள். அப்பாஸ் இத்தாலியன் பீரப்பா பேட்டி …. தென்காசி அக்டோபர் 14 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரில் அமைந்துள்ளது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வியில் சுமார் 3000 மாணவிகள் பயின்று வருகின்றனர் மேற்படி பள்ளியில் உள்ள கழிவறைகளில் மாணவிகளும் கழிவறையை பயன்படுத்திய பின் சரியாக சுத்தம் செய்யாததால் இருக்கின்ற துப்புரவு பணியாளர் காலை மட்டும் துப்புரவு செய்வதால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது இது குறித்து பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளி உயர் அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளனர் நகராட்சியில் இருந்து துப்புரவு பணிற்கு கூடுதல் இரு பணியாளர்கள் அமர்த்தப்பட்ட போதும் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒருவர் மட்டுமே பணி செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகரின் முக்கியமான மருத்துவரிடம் சிறுநீர் தொற்று பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒரே நாளில் ஒன்பது பேர் சிகிச்சைக்காக சென்றனர் இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கடையநல்லூர் நகர திமுக செயலாளர் இத்தாலியன் பீரப்பாஅவர்கள் கவனத்திற்கு கொண்டு வரவே தென்காசி மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள மறவர் மண்டபத்தில் வைத்து கடையநல்லூர் நகராட்சி 7.8 மற்றும் 9வது வார்டு பகுதிகளுக்கான நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பங்கேற்ற நகர திமுக செயலாளர்கள் அப்பாஸ் (வடக்கு) மற்றும் இத்தாலியன் பீரப்பா (தெற்கு ) நகர இளைஞரணி அமைப்பாளர் யாசின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும் நகர மன்ற உறுப்பினருமான மாலதி சமூக ஆர்வலர் மணிமேகலை அடங்கிய குழுவினர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரமலாதாவை நேரில் சந்தித்து எடுத்துக் கூறினர் தலைமை ஆசிரியை பள்ளியில் உள்ள கழிவறை சுத்தம் செய்வதற்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லை நாங்களும் மாணவிகளிடம் கழிவறையை பயன்படுத்திய பின் சுத்தம் செய்ய எடுத்துக் கூறி வருகிறோம் போதுமான துப்புரவு பணியாளர்கள் இருந்தால் மாணவிகளுக்கு சிறுநீர் தொற்று பாதிப்பு வராது என தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து தற்சமயம் உடனடியாக நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரண்டு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய கேட்டுக் கொண்டனர் மேலும் தொடர்ந்து 3000 மாணவிகள் படிக்கும் இப்ப பள்ளிக்கு நிரந்தரமாக கூடுதல் இரு துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்யும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோரை அணுகி தங்களது எழுத்துப்பூர்வமான கோரிக்கை மனுக்களை கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது பள்ளி ஆசிரியைகள் மாணவிகளிடம் கண்டிப்பான முறையில் கழிவறையை பயன்படுத்திய பின் நன்கு சுத்தம் செய்யவும் மேலும் சிறுநீர் பாதிப்பு தொற்று குறித்து மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் 80 ஆசிரியைகள் பணியாற்றும் இப்பள்ளியில் ஒவ்வொரு ஆசையையும் மாதந்தோறும் ரூபாய் நூறு பள்ளி வளர்ச்சி நிதி இதற்கு கொடுத்தாலே அந்தப் பணத்தில் இரு துப்புரப் பணியாளர்கள் சம்பளம் வழங்கலாம் கல்வித்துறை சார்பில் துப்புரவு பணியாளர்கள் சம்பளம் ஏதும் வழங்கப்படுகிறதா எனவும் இந்த தகவலும் இல்லாததால் கல்வித் துறை அதிகாரிகள் எதுவும் கண்டு கொள்வதில்லை ஏற்கனவே பெற்றோர் ஆசிரியர் சங்கம் அதனை தாண்டி தற்போது பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு என்ற அமைப்பும் உள்ளது அவர்கள் இதுகுறித்து நன்கு ஆலோசனை செய்து மாணவிகளின் நலன் கருதி நமக்கு நாமே திட்டம் ஒன்று செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்













