சென்னை வண்ணாரப்பேட்டை எம்சிஎம் கார்டன் உள்ள சித்தி விநாயகர் நண்பர்கள் குழு சார்பில் 48 ஆவது ஆண்டு விழா முன்னிட்டு 11 அடி உள்ள விநாயகர் சிலை வைக்கப்பட்டு ஒன்பது நாளும் சிறப்பு பூஜையும் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது இதில் புதன்கிழமை அன்று அப்பகுதியில் 15 வயது உட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி மாறுவேட போட்டி பாட்டு போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது அதில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி,என் மருது கணேஷ் , டி ரங்கநாதன் மற்றும் விழா குழு நண்பர்கள் ஆன ஜே முருகேசன், எஸ் கே ஹரிபாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்