தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் பேரவை சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று காலை நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சேலம் பாலு தலைமை வகித்தார் மாநில பொது செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை திருவள்ளுவர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழக முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் கலந்து கொண்டு பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் அதில் தென்காசி செங்கோட்டை கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வண்ணார்கள் பட்டியல் சாதியில் உள்ளனர் அதனை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் வீட்டு வசதி வாரியத்தில் 5 சதவீதம் வீடு ஒதுக்குவது போல் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சியில் கட்டப்படும் கடைகளில் மானிய வாடகையில் 5 சதவீதம் ஒதுக்க வேண்டும் மழைக்காலங்களில் மீனவர்கள் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்குவது போல் சலவை தொழிலாளர்களுக்கு மழைக்காலங்களில் நிவாரணத் தொகை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாநில முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துணி சலவை செய்வதற்கு வன்னார்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் சலவை தொழிலாளர்களுக்கு நவீன கருவிகள் கூடிய சலவை துறையை அமைத்து தர வேண்டும் நத்தம் புறம்போக்கு பகுதியில் உள்ள வண்ணர்களுக்கு பட்டா வழங்குவதை மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் தவித்து வருகிறார்கள் அதனை மாற்றி பட்டா வழங்க உத்தரவு விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் தமிழக முதல்வர் சலவை தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க வடக்கு கடற்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.