சென்னை வண்ணாரப்பேட்டை எம்சிஎம் கார்டன் குறுக்குத் தெருவில் உள்ள ஓம் ஸ்ரீ கற்பக விநாயகர் விழா குழு நண்பர்கள் சார்பில் 40 ஆம் ஆண்டு விழாவில் 8 உயரமுள்ள விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஆரம்பித்த நாளிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை விநாயகரின் ஊர்களும் செல்லும் வரை தினம் தோறும் சிறப்பு பூஜையும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் செவ்வாய் கிழமை அன்று ஆலய குழு நண்பர்கள் சார்பில் திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அப்ப பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வட சென்னை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஜேஜே எபினேசர் அவர்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை துவங்கி வைத்தார் உடன் வட்டச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், பி கே மூர்த்தி மற்றும் விழா குழு நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்